பூமியின் வளிமண்டல பகுதிக்கு செயலிழந்த செயற்கைகோளை திரும்ப கொண்டு வரும் இஸ்ரோ: சிக்கலான பணி இன்று நடக்கிறது

பெங்களூரு: இஸ்ரோ , பிரான்ஸ் விண்வெளி நிறுவனம் இணைந்து  2011ம் ஆண்டு அக்டோபர் 21ல் மேகா டிரோபிகியூஸ்-1 (எம்டி-1) செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பின. பூமியின் வானிலை மற்றும் காலநிலை ஆய்வுக்காக அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 3 ஆண்டுகள். தற்போது, செயலிழந்து விட்ட இந்த செயற்கைகோளை விண்வெளியில் இருந்து அகற்றி அதனை பூமியின் வளிமண்டல பகுதிக்கு திரும்ப கொண்டு வரும் பணியை இஸ்ரோ இன்று மேற்கொள்ள உள்ளது. இந்த செயற்கைகோள் 1000 கிலோ எடை கொண்டது.

இதில் இன்னமும் பயன்படுத்தப்படாத 125 கிலோ எரிபொருள் மீதமுள்ளது.  இது பாதி வழியிலேயே இரண்டாக உடைந்து விழும் அபாயம் உள்ளது. எனவே இது சிக்கலான பணியாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் பசிபிக் பெருங்கடலில்   செயற்கைகோளின் எரிபொருள் கொட்டப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த செயற்கைகோள் எரிந்து கடலில் விழும்.  இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணிக்குள் இது நிகழும் என இஸ்ரோ   குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: