காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக திருத்தேரோட்டம் தொடங்கியது: கோவிந்த கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேரை இழுத்த பக்தர்கள்

கோவை: காரமடை அரங்கநாதர் கோவில் மாசிமக திருத்தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பழம்பெரும் கோயிலான காரமடை அரங்கநாதர் திருக்கோவிலில் கடந்த 28ம் தேதி மாசிமக திருத்தேரோட்டம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதன் முக்கிய நிகழ்வாக இன்று, மாசிமக திருத்தேரோட்டம் மாலை 4.45 மணிக்கு துவங்கியது. இந்த தேரோட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் அனைவரும் கோவிந்த கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேரை இழுத்தனர்.

இந்த மாசிமக திருத்தேரோட்டம் மாட வீதியின் வழியாக உலா வந்தது. மேலும் இந்த தேரானது இரவு 7.30 மணியளவில் மீண்டும் கோவிலின் நிலையைவந்தடையும்.

இந்நிகழ்விற்காக காரமடை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

Related Stories: