திருப்பதியில் வருடாந்திர தெப்பல் உற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5 நாட்கள் நடைபெறும் வருடாந்திர தெப்பல் உற்சவம் கோலாகலமாக நேற்று தொடங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கோவிந்தா, கோவிந்தா’ என்ற முழக்கமிட்டபடி தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்பல் உற்சவம் நேற்று தொடங்கியது.   முதல் நாளான நேற்றிரவு சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத கோதண்டராமருடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் 3 சுற்றுகள்  வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தெப்பல் உற்சவத்தில் சுவாமி வலம் வருவதை காண தெப்பக்குளத்தை சுற்றி தரிசனத்துக்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து ‘கோவிந்தா கோவிந்தா’ என்று பக்தி முழக்கமிட்டபடி வணங்கினர். வரும் 7ம் தேதி வரை தெப்பல் உற்சவம் நடக்கிறது.

Related Stories: