ஹிஜாவு, ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தலைமறைவாக உள்ள 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு

டெல்லி: ஹிஜாவு, ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் தலைமறைவாக உள்ள 15 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக பொருளாதார குற்றப்பிடிவு போலீசார் அறிவித்துள்ளனர். மக்களை நம்ப வைத்து நிதி மோசடி செய்த ஹிஜாவு, ஆருத்ரா நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிடிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதிக வட்டி தருவதாக மோசடி செய்த 3 வழக்குகளில் தொடர்புடைய 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐ.எஃப்.எஸ், ஹிஜாவு மற்றும் ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனம் முதலீடு செய்யும் தொகைக்கு,அதிக வட்டி தருவதாகக்கூறி, ரூ.6 ஆயிரம் கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

Related Stories: