தூத்துக்குடியில் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர் பகுதியில் முறையான சாலை வசதி வேண்டி வ.உ.சிதம்பரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகர் பகுதியில் 3 வது மைல் பகுதியிலிருந்து மில்லர்புரம் சாலை, புதிய பேருந்து நிலையத்திலிருந்து விவிடி சிக்னல் வரை உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகரில் நாள் தோறும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வ.உ.சி கல்லூரி மாணவ, மாணவிகள் குறித்த நேரத்தில் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தாமதமாக வரும் மாணவர்களை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்காததால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக  இந்திய மாணவர் சங்கம்  மாவட்ட தலைவர் கார்த்திக் தலைமையில்  கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 150 மாணவிகள் உட்பட சுமார் 350பேர் பங்கேற்றனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மாணவ, மாணவிகள் கலைந்து சென்றனர்.

Related Stories: