புதுடெல்லி: இந்தி தொலைக்காட்சி நடிகை டெபினா பொன்னர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு ‘இன்ஃப்ளூயன்ஸா பி வைரஸ்’ தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் நான் எனது குடும்பத்தை விட்டு விலகி உள்ளேன். எனது இரண்டு மகள்களான லியானா, திவிஷா ஆகியோர் நலமாக உள்ளனர். எனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால், அவர்களை விட்டும் விலகி உள்ளேன்.
