அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில் பழங்குடியினருக்கு இலவச வீட்டுமனை பட்டா: எம்எல்ஏ துரைசந்திரசேகர் வழங்கினார்

பொன்னேரி: பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சியில், அத்திப்பட்டு புதுநகர் மேற்கு பகுதியில் 546 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல், துணை தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் ஆகியோர் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்க்கு பலமுறை கோரிக்கைவைத்திருந்தனர். அதேபோல், அத்திப்பட்டு ஊராட்சியில் அருனோதயா டிரஸ்ட் சார்பில், 48 பழங்குடியின குடும்பங்கள் கோரிக்கை வைத்தனர்.அக்கோரிக்கையை ஏற்று, பொன்னேரி வருவாய் துறை சார்பில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில், அத்திப்பட்டு முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் எம்.டி.ஜி.கதிர்வேல் முன்னிலை வகித்தார். முன்னதாக  ஊராட்சி செயலர் பொற்கொடி அனைவரும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன், பொன்னேரி எம்எல்ஏ துரைசந்திரசேகர், ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜி.ரவி.பொன்னேரி, தாசில்தார் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டு 48 பழங்குடியின குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினர்.

பின்னர், மகளிர் சுயஉதவி குழு கடன் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல்  சொந்த நிதியிலிருந்து இலவச ஆடுகள் வழங்கினார். விழாவில், பொன்னேரி வருவாய்துறை மண்டல துணை வட்டாட்சியர் பாரதி, வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம், கிராம நிர்வாக அலுவலர்கள் தவசிவய்யன், பாயாசா, ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: