மதுரை எயம்ஸுக்கு வெறும் ரூ.12 கோடி... ஹிமாச்சலம் பிலாஸ்பூர் எய்ம்ஸுக்கு ரூ.1,407 கோடி ஒதுக்கீடு செய்தது ஒன்றிய அரசு!!!

மதுரை : மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒன்றிய அரசு இதுவரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் அம்பலமாகி உள்ளது. ஒன்றிய அரசு ஒதுக்கிய ரூ.12 கோடி என்பது ஒட்டுமொத்த மதிப்பீடான ரூ.1,977 கோடியில் 1%க்கும் குறைவானது.2015ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.அடிக்கல் நாட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணிகள் இதுவரை தொடங்கவில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டப்படாத நிலையில், மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு மாற்று இடத்தில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

026ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் நிறைவடையும் என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மதுரையுடன் சேர்ந்து அறிவிக்கப்பட்ட ஹிமாச்சலம் பிலாஸ்பூர் எய்ம்ஸுக்கு ஒன்றிய அரசு இதுவரை ரூ.1,407 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கட்டுமான பணி தொடங்காத நிலையில் பிலாஸ்பூரில் பணி முடிந்து கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஒன்றிய அரசு ஒதுக்கிய ரூ.12. கோடியில் சுற்றுச் சுவர் கட்டும் பணி  உள்ளிட்டவை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: