காரைக்காலில் கந்தூரி ஊர்வலம் நடைபெறும் சாலைகள் செப்பனிடப்படுமா?..பொதுமக்கள் கோரிக்கை

காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா 200ம் ஆண்டு கந்தூரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. கந்தூரி விழாவையொட்டி, மாவட்ட நிர்வாகம் மற்றும் வக்பு நிர்வாக சபை மூலம் பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கந்தூரி விழா நெருங்கும் நிலையில், சந்தனக்கூடு கந்தூரி ஊர்வலம் செல்லும் தெருக்களில் சாலைகள் பள்ளமும் மேடாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

குறிப்பாக முஸ்தாபா கமால் வீதி, கிதர்பள்ளி வீதி சந்திப்பு, லெமர் வீதி சந்திப்பு மற்றும் மாதா கோவில் வீதிகளில் கழிவுநீர் பாதை மிக மோசமாக இருப்பதால் ஊர்வலம் செல்ல முடியாத நிலையில் உள்ளது. எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடன் கவனித்து துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: