எதிர்க்கட்சி துணை தலைவருக்கு பேரவையில் இருக்கை ஒதுக்குவது எனது உரிமை: சபாநாயகர் அப்பாவு பேட்டி

தென்காசி: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது எனது உரிமை என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். தென்காசி அரசு பள்ளியில் நடந்த விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு கூறுகையில், குடும்ப அட்டைதாரர்களில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். அது இந்த ஆண்டிலேயே வழங்கப்படும். தென்காசி பகுதியில் வனவிலங்குகள் விளைநிலத்தை சேதப்படுத்துவது குறித்து எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் பேசி இருக்கின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கும், என்றார்.சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு இருக்கை எங்கு ஒதுக்கப்படும் என்ற கேள்விக்கு, அது சட்டமன்ற விவகாரம். இருக்கையில் யாரை எங்கு அமர வைக்க வேண்டும் என்பது சட்டப்பேரவை தலைவரின் முழு உரிமை. எப்படி நாடாளுமன்ற தலைவருக்கு உரிமை உள்ளதோ அது போன்று எனக்கும் உள்ளது. அதனை நீங்கள் சட்டமன்றத்தில் பார்க்கலாம்’ என்றார்.

Related Stories: