குலாம்நபி ஆசாத் குறித்து ஜெய்ராம் ரமேஷ் சர்ச்சை கருத்து; ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்: 2 வாரத்தில் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தல்

புதுடெல்லி: குலாம்நபி ஆசாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஜெய்ராம் ரமேஷ் கூறியதால் அவருக்கு எதிராக ரூ. 2 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், ஜம்மு - காஷ்மீரில் தனிகட்சி தொடங்கி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் குலாம்நபி ஆசாத்துக்கு எதிராக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கடந்த சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இவரது கருத்து ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில் ஜெய்ராம் ரமேஷூக்கு எதிராக குலாம் நபி ஆசாத் சார்பில் அவரது வழக்கறிஞர் நரேஷ் குமார் குப்தா என்பவர் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில், ‘பத்திரிகையாளர் சந்திப்பு, சமூக ஊடகங்களின் வாயிலாக எனது கட்சிக்காரர் குலாம்நபி ஆசாத்துக்கு எதிராக ஜெய்ராம் ரமேஷ் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியுள்ளார். இதன்மூலம் அவரது நற்பெயரை ெஜய்ராம் ரமேஷ் கெடுத்துள்ளார். அதனால் எனது கட்சிக்காரருக்கு ரூ .2 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டும். மேலும்  அடுத்த 2 வாரங்களில் பத்திரிகை, சமூக ஊடங்களின் மூலம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று அறிவித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Related Stories: