சென்னையில் நடைபெறும் முதல்வர் பிறந்தநாள் கூட்டத்தில் திமுகவினர் பங்கேற்க வேண்டும்: தா.மோ.அன்பரசன் அழைப்பு

காஞ்சிபுரம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழாவில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து திமுகவினர் பங்கேற்க வேண்டும் என மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திராவிட இயக்கத்தின் தன்னிகரில்லா தலைவர், தமிழின தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா வருகிற மார்ச் 1ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் மாலை 4 மணியளவில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்திய அரசியல் வரலாற்றில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ள பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜீன கார்கே - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா - சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் - ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித்தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். திராவிட இயக்கத்தின் - ஏற்றமிகு தலைவருக்கு 70வது ஆண்டு பிறந்தநாள் விழா வாழ்த்துக்களை மார்ச் 1 அன்று காலை 8 மணிகெல்லாம் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில்  நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க அனைவரும் வரவேண்டும்.

அதே வேளையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள திமுகவினர் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். அத்துடன் மார்ச் 1ம் தேதி மாலை, இந்தியாவில் இருக்கும் முதலமைச்சர்களுக்கெல்லாம் வழிகாட்டி இருக்க கூடிய நம்முடைய முத்தான முதல்வர் மு.க.ஸ்டாலின்  வாழ்த்திப் பேசுவதற்காக அகில இந்திய தலைவர்கள் அணிவகுத்து பங்கேற்கும் இந்தியா வரலாற்று பொன்னேட்டில் பொறிக்கக் கூடிய வகையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், சிற்றூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான திமுகவினர், இளைஞர் அணியினரும், மகளிர் அணியினரும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் பங்கேற்க அழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

Related Stories: