எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை நாட அதிமுக முடிவு..!!

சென்னை: எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை நாட அதிமுக முடிவு செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக இடைக்கால பொதுக்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு அங்கீகாரம் வழங்ககோரி அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அதிமுக விதிகள் திருத்தப்பட்டதை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருந்தது. தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை சமர்ப்பித்து, கட்சியின் திருத்தப்பட்ட அமைப்பு விதிகளை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையத்தை அணுக உள்ளார். விரைவில் இதற்கான ஒப்புதல் தேர்தல் ஆணையத்தால் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: