கோத்தகிரி அருகே குடியிருப்பில் புகுந்து உலா வந்த சிறுத்தை

கோத்தகிரி: கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பெரியார் நகர் பகுதியில் குடியிருப்பு அருகே உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி கேமரா பதிவு பொதுமக்களை அச்சமடைய செய்துள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் உலா வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அடிக்கடி கரடி மட்டும் உலா வரும் அரவேனு அருகே உள்ள பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று உலா வந்துள்ளது.

நீண்ட நேரம் குடியிருப்புக்கு வெளியே உள்ள சாலையில் உலா வந்து ஏதேனும் உணவு கிடைக்குமா என சிறிது நேரம் நோட்டமிட்டுவிட்டு பின்பு வனப்பகுதிக்குள் ஓடி சென்று விட்டது. இந்த காட்சி குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி பதிவை ஆய்வு செய்த போது இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வந்தது தெரியவந்துள்ளது.,  இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: