சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வின் 2ம் தாள் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2க்கான அறிவிப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, இம்மாதம் 3ம் தேதி முதல் 15ம் தேதி வரை கணினி வழித் தேர்வுகள் நடந்தது. தற்போது தாள் இரண்டின் தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. மேற்கண்ட தகுதித் தேர்வு தாள்-2, எழுதியோர் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் தேர்வு எழுதினார்களோ அந்த அமர்வுக்கு உரிய முதன்மை கேள்வித்தாள் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெளியிடப்பட்டுள்ளது.