ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் ஆகியோருடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெற உள்ளது.   அவ்வப்போது தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, அதே போன்று ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.    

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் காணொலி மூலம் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. இதற்கு முன்பாகவே ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் எவ்வாறு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது எனவும் தேர்தல் நடத்தும் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் இதற்கு ஆலோசனை கொண்ட நிலையில் தற்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது.   

தேர்தல் குறித்தும் பல்வேறு விதமான புகார்கள் வரக்கூடிய நிலையில், புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: