ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.18.64 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

ஆனைமலை :  பொள்ளாச்சியை  அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை  ஏலம் நடைபெற்றது. இதற்காக ஆனைமலை மற்றும் கோட்டூர், அம்பராம்பாளையம், சேத்துமடை,  ரமணமுதலிபுதூர், சேத்துமடை, ஒடையக்குளம், வேட்டைக்காரன்புதூர் உள்ளிட்ட   பல்வேறு  கிராமங்களை சேர்ந்த 64 விவசாயிகள் மொத்தம் 5,491 மூட்டை கொப்பரை  கொண்டு வந்திருந்தனர்.

 அவை தரம் என பிரித்து, விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது. இதில்  முதல் தரம் ஒரு கிலோ ரூ.74.20 முதல் அதிகபட்சமாக  ரூ.80.75 வரையிலும். 2ம் தரம் ஒரு கிலோ ரூ.56.50  முதல் ரூ.71.50 வரையிலும் என, மொத்தம் 19 டன் கொப்பரை ரூ.18.64 லட்சத்துக்கு  ஏலம்போனது. இதனை, 10 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர் என அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories: