புதுடெல்லி: சட்டீஸ்கர், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், வன்முறை மற்றும் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தரில் கிறிஸ்தவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கிறிஸ்தவர்கள் மற்றும் தேவாலயங்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுத்து நிறுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
