வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது துருக்கி அனுப்பிய பொருளுக்கு மீண்டும் ‘ஸ்டிக்கர்’ ஒட்டி அனுப்பிய பாகிஸ்தான்: மூத்த பத்திரிகையாளர் பரபரப்பு பேட்டி

இஸ்லாமாபாத்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது துருக்கி அனுப்பிய நிவாரண பொருளை மீண்டும் துருக்கிக்கே பாகிஸ்தான் அனுப்பியதாக அந்நாட்டு மூத்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு கடன் மற்றும் கடும் பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் பாகிஸ்தான், நிலநடுக்கத்தால் பெரும் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டிற்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி உள்ளது. தற்போது அந்த நிவாரணப் பொருட்கள் குறித்த தகவல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர் ஷாஹீர் மன்சூர் என்பவர் செய்தி சேனல்  ஒன்றுக்கு அளித்த பேட்டியியில், ‘இஸ்லாமாபாத்தில் இருந்து துருக்கியின் அங்காராவுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. அவை யாவும், கடந்த ஆண்டு கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு துருக்கிய அனுப்பி நிவாரணப் பொருட்கள் ஆகும். இதில், பழங்கால கூடாரங்கள், போர்வைகள், பிற அத்தியாவசிய பொருட்கள்  உட்பட 21 கொள்கலன்களில் அடைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்களில் பாகிஸ்தான் அரசின் முத்திரை  உள்ளது; ஆனால் அந்த நிவாரணப் பொருட்களை திறந்து பார்த்தால் அதில், ‘துருக்கியர்களின்  அன்புடன்...’ என்று எழுதப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு துருக்கியர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களை அவர்களுக்கே மீண்டும் பேக்கிங் செய்து அதே பொருட்களை அனுப்பியது மிகவும் வெட்கக் கேடானது’ என்று கூறியுள்ளார். முன்னதாக துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது, அங்குள்ள மக்களை பார்த்து ஆறுதல் கூற பாகிஸ்தான் பிரதமர்  ஷாபாஸ் ஷெரீப் அங்கு செல்லவதாக அறிவித்தார். ஆனால் துருக்கி அரசு, தற்போதைய நிலையில் எந்த  நாட்டின் பிரதமரையும் வரவேற்கும் சூழலில் அரசு இல்லை என்று தெரிவித்தது. அதனால் பாகிஸ்தான் பிரதமரின் பயணம் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

Related Stories: