உலக வெப்பமயமாதலால் விபரீதம் அண்டார்டிகா கடல் பனி வேகமாக உருகுகிறது: 2வது ஆண்டாக சரிவு

வாஷிங்டன்: உலக வெப்பமயமாதல் விபரீதத்தால் தொடர்ந்து 2வது ஆண்டாக அண்டார்டிகா கடல் பனியின் அளவு கடும் சரிவை கண்டுள்ளது. அண்டார்டிகாவின் கடல் பனி அளவு குறித்த அறிக்கையை தேசிய பனி மற்றும் பனிக்கட்டி தகவல் மையம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அறிக்கை கடந்த 13ம் தேதி வரை கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, அண்டார்டிகா கடல் பனி அளவு 1.91 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகும்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 25 வரையிலான கணக்கெடுப்பில் 1.92 மில்லியன் சதுர கிலோ மீட்டராக இருந்தது. அது அதற்கு முந்தைய ஆண்டை விட மிகக் குறைந்த அளவாக பதிவானது. தற்போது தொடர்ந்து 2வது ஆண்டாக குறைந்தபட்ச பனி அளவு பதிவாகி உள்ளது. மேலும், கடந்த ஆண்டுகளில் பிப்ரவரி 18 முதல் மார்ச் 3 வரை பனி அளவு சரிவு கடுமையாக இருந்துள்ளது. எனவே, இந்த ஆண்டிற்கான பனி அளவில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

Related Stories: