தி.மலை ஏடிஎம் கொள்ளையர்கள் கைதா?.. காவல்துறை மறுப்பு

தி.மலை: திருவண்ணாமலையில் ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்தவர்கள் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு எஸ்.பி. கார்த்திகேயன் மறுப்பு தெரிவித்துள்ளார். 6 பேர் கைது செய்யப்பட்டதாக வெளியாகி இருந்த நிலையில் இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. திருவண்ணாமலையில் ஒரே நாளில் 4 ஏடிஎம் மையங்களில் மொத்தம் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Related Stories: