நீதித்துறையை மாற்றி அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு: இஸ்ரேல் நாடாளுமன்றம் முற்றுகை

ஜெருசலேம்: இஸ்ரேலில் அதிக அதிகாரம் கொண்டதாக கருதப்படும் நீதித்துறையை கட்டுப்படுத்தும் வகையிலான புதிய திட்டங்களை அரசு முன்மொழிந்துள்ளது.  இதன் ஒரு பகுதியாக நீதிபதிகளை நியமிப்பதில் அரசியல்வாதிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.  நாடாளுமன்றத்தின் முன் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அரசின் புதிய திட்டத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.

இதன் காரணமாக பதற்றமான சூழல் நிலவியது. ஜெருசலேமிற்கு ரயிலில் வந்த போராட்டக்காரர்கள் பிரதான ரயில்நிலையத்தில்  ஜனநாயகம் என்று முழக்கமிட்டு தங்களது எதிர்ப்பை காட்டினார்கள். இதேபோல் ஜெருசலேமின் மேற்கு சுவர் அருகே நூற்றுக்கணக்கானோர் திரண்டு அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரதமர் நேதன்யாகு அரசு முன்மொழிந்த மசோதா வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்கெடுப்பு நடத்தமுயன்றபோது நாற்காலிகளில் ஏறி நின்று வாக்கெடுப்புக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள்.

Related Stories: