கோடிகளில் வாங்கப்பட்ட இந்திய வீராங்கனைகள்: ரூ.3.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா

மும்பை: மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஐபிஎல் போன்று முதல் முறையாக பெண்களுக்கும் ஐபிஎல் போட்டி நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, பெண்கள் ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் வீராங்கனைகளை பல அணிகள் ஏலத்தில் எடுத்து வருகின்றன. ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏலத்தில் 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 90 வீராங்கனைகளை வாங்க ஐந்து அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஸ்மிருதி மந்தனா - ரூ 3.4 கோடி

சோஃபி டெவின் (NZ) - ரூ 50 லட்சம்

எல்லிஸ் பெர்ரி (AUS) – ரூ. 1.7 கோடி

ரேணுகா சிங் – ரூ. 1.5 கோடி

ரிச்சா கோஷ் - ரூ. 1.9 கோடி

UP வாரியர்ஸ்

சோஃபி எக்லெஸ்டோன் (ENG) - ரூ. 1.8 கோடி

தீப்தி சர்மா – ரூ. 2.6 கோடி

தஹ்லியா மெக்ராத் (AUS) – ரூ. 1.4 கோடி

ஷப்னிம் இஸ்மாயில் (SA) – ரூ. 1 கோடி

அலிசா ஹீலி (AUS) - ரூ 70 லட்சம்

அஞ்சலி சர்வானி - ரூ 55 லட்சம்

ராஜேஸ்வரி கயக்வாட் - ரூ 40 லட்சம்

ஸ்வேதா செஹ்ராவத் - ரூ 40 லட்சம்

பார்ஷவி சோப்ரா - ரூ 10 லட்சம்

எஸ் யாசஸ்ரீ - ரூ 10 லட்சம்

மும்பை இந்தியன்ஸ்:

ஹர்மன்ப்ரீத் கவுர் – ரூ. 1.8 கோடி

நாட் ஸ்கிவர்-பிரண்ட் (ENG) - ரூ. 3.2 கோடி

அமெலியா கெர் (NZ) – ரூ. 1 கோடி

பூஜா வஸ்த்ரகர் - ரூ 1.9 கோடி

யாஸ்திகா பாட்டியா - ரூ 1.5 கோடி

குஜராத் ஜெயண்ட்ஸ்

ஆஸ்லே கார்ட்னர் (AUS) – ரூ. 3.2 கோடி

பெத் மூனி (AUS) – ரூ. 2 கோடி

சோபியா டன்க்லே (ENG) - ரூ. 60 லட்சம்

சினே ராணா - ரூ 75 லட்சம்

அன்னாபெல் சதர்லேண்ட் (AUS) - ரூ 70 லட்சம்

டியான்ட்ரா டாட்டின் (WI) - ரூ 60 லட்சம்

ஹர்லீன் தியோல் - ரூ 40 லட்சம்

டெல்லி கேபிடல்ஸ்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ரூ. 2.2 கோடி

மெக் லானிங் (AUS) – ரூ. 1.1 கோடி

ஷஃபாலி வர்மா - ரூ. 2 கோடி

டைட்டாஸ் சாது - ரூ 25 லட்சம்

ராதா யாதவ் - ரூ 40 லட்சம்

ஷிகா பாண்டே - ரூ 60 லட்சம்

மரிசானே கப் (SA) - ரூ 1.5 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ்ஏலம் எடுத்தது.

Related Stories: