துருக்கி: துருக்கியில் நிலநடுக்கத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கடும் குளிரில் வாடும் மக்களுக்கேன கேரவன்களை கத்தார் வழங்கி இருக்கிறது. துருக்கி மற்றும் சிரியாவின் எல்லை பகுதிகளை உருகுலைத்த பயங்கர நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தில் உயிர்தப்பி வீடுகளை இழந்த பலரும் சாலைகளில் தங்கியிருக்கும் சூழலில் கடும் குளிரை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் சிரியாவில் மீட்கப்பட்டவர்களுக்கேன காலியான இடத்தில் வரிசையாக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பள்ளிகள், மருத்துவமனைகள் தற்காலிகமாக இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
