2,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு!: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு - நிசான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!

சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு மற்றும் நிசான் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. நிசான் மோட்டார் கார்ப்பரேசன் என்பது ஒரு ஜப்பானியப் பன்னாட்டுத் தானுந்து உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பொதுவாக நிசான் என்னும் சுருக்கப் பெயரால் அறியப்படுகிறது. இதன் தலைமையகம் யொக்கொகாமாவில் உள்ள நிசிக்கு என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசு - நிசான் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

ரூ.5.300 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 2,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. சென்னை ஓரகடத்தில் இயங்கி வரும் நிசான் கார் தயாரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை அடுத்த ஒரகடம் பகுதியில் உற்பத்தி ஆலையை 610 ஏக்கரில் நிசான் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 10 லட்சம் கார்களை நிசான் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது.

6 புதிய கார்களை அறிமுகம் செய்யும் நிசான்:

நிசான் - ரெனால்ட் இணைந்து புதிதாக 6 மாடல் கார்களை தயாரிக்க உள்ளோம் என ரெனால்ட் நிறுவன சி.ஓ.ஓ. அஸ்வானி குப்தா தெரிவித்துள்ளார். 3 மின்சார கார்கள் உள்பட புதிதாக 6 கார்களை தயாரிக்க உள்ளதாகவும் அஸ்வானி பேசினார்.

Related Stories: