சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான தமிழ், ஆங்கில பேச்சுப்போட்டி

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: ‘திராவிட மாடல் அரசு’ என்ற லட்சியத்தை தமிழக கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தமிழகத்திலுள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சு போட்டிகளை கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டிலும் நடத்த இருக்கிறது. போட்டிகள் மாவட்ட அளவில் தமிழில் 15 தலைப்பிலும் ஆங்கிலத்தில் 15 தலைப்பிலும் தனித்தனியாக நடத்தப்படும். மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் கலந்துகொள்ளும் மாநில அளவிலான போட்டி இறுதியில் நடத்தப்படும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.10 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும், அதேபோல் மாநில அளவில் முதல் பரிசாக ரூ.1 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களது நிறுவனத்தின் சார்பாக தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தலா இரண்டு மாணவர்களை அனுப்பலாம். வரும் 20ம் தேதிக்குள் மாணவர்களின் பெயர்களை smcelocution@gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் ரவிச்சந்திரன், உறுப்பினர் செயலர், மாநில சிறுபான்மையினர் ஆணையம், முதல் தளம், கலச மஹால், புராதன கட்டிடம், சேப்பாக்கம், சென்னை -600005 என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

Related Stories: