சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தேமுதிக என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியிலிருந்து பிரசாரத்தில் ஈடுபட உள்ள நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியல் அந்தந்த அரசியல் கட்சிகள் சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்கப்பட்டு அதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கி வருகிறது.
அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் செய்ய 34 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அளித்திருந்தது. அந்த பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் 34 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள் பெயர் வருமாறு: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் மற்றும் ப.சிதம்பரம், டாக்டர்வல்ல பிரசாத், டாக்டர் ஏ.செல்லக்குமார், பி.மாணிக்கம் தாகூர், கு.செல்வப்பெருந்தகை, கே.வீ. தங்கபாலு, திருநாவுக்கரசர், எம். கிருஷ்ணசாமி, கே.ஆர்.ராமசாமி, டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், சி.டி.மெய்யப்பன், கிறிஸ்டோபர் திலக், பெ.விஸ்வநாதன், மயூரா எஸ்.ஜெயக்குமார், டாக்டர் கே.ஜெயக்குமார், டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத், பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஜோதிமணி, கார்த்தி ப.சிதம்பரம், விஜய் வசந்த், மோகன் குமாரமங்கலம், எஸ்.ராஜேஷ்குமார், ஜே.ஜி.பிரின்ஸ், ரூபி ஆர்.மனோகரன், டாக்டர் எஸ்.விஜயதரணி, சசிகாந்த் செந்தில், ஆ.கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.பி.சி.வி.சண்முகம், அழகு ஜெயபாலன், கே.சிரஞ்ஜீவி, செங்கம் ஜி.குமார் என மொத்தம் 34 பேர் இடம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.