வில்வித்தை வீரர் அடித்துக்கொலை

சங்ககிரி: சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா கோரணம்பட்டியை சேர்ந்தவர் வசந்த் (23). வில்வித்தை வீரரான இவர், மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். இவர் இடைப்பாடி அடுத்த வெள்ளாண்டிவலசு என்ற இடத்தில் மெடிக்கல் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம்  காலை 8 மணிக்கு மெடிக்கல் கடைக்கு சென்றவர், இரவு 10 மணிக்கு மேல்  ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.

இந்நிலையில் அங்குள்ள குட்டை அருகே காயங்களுடன் வசந்த் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து அவரை யாரும் கடத்தி கொலை செய்து குட்டையில் வீசினார்களா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: