ஓடும் பைக்கில் ‘ரொமான்ஸ்’: காதல் ஜோடி மீது போலீஸ் வழக்கு

அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள கிறிஸ்டியன் கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சாஹில் மாசி (24) என்பவர் இளம் பெண்ணுடன் பைக்கில் சென்றார். சாஹில் மாசி பைக்கை ஓட்டிச் சென்ற போது, பின்பக்க சீட்டில் அமர்வதற்கு பதிலாக அவரது முன்பக்கமாக அந்தப் பெண் அமர்ந்திருந்தார். இருவரும் நெருக்கமாக முத்தங்களை பகிர்ந்து கொண்டு பைக்கில் சென்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதையடுத்து சாஹில் மாசி மற்றும் அந்தப் பெண்ணின் மீது ஐபிசி 336, 279, 294 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் கரண் சிங் காங்கரோட் கூறினார். தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் இருவரையும் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: