ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்., அதிமுக, தேமுதிக வேட்பாளர் உள்பட 80 வேட்புமனுக்கள் ஏற்பு..!!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் உட்பட 80 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி நேற்று முடிவுக்கு வந்தது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தம் 96 வேட்புமனு தாக்கல் செய்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. பிரதான கட்சிகளான திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குக்கர் சின்னம் கிடைக்காததால் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த அமமுக வேட்பாளர் சிவபிரசாத் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளராக மனுத்தாக்கல் செய்து பின்னர் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் வேட்புமனுவை கட்சி சார்பில் முன் மொழியாததால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: