ரேணிகுண்டா, திருச்சானூர் சாலை பணிகளை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்-ஆணையாளர் உத்தரவு

திருப்பதி : ரேணிகுண்டா, திருச்சானூர் சாலை பணிகளை வருகிற மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஆணையாளர் அனுபமா அஞ்சலி உத்தரவிட்டுள்ளார்.  

திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் மேம்பால பணிகள் தொடர்பாக ஆணையாளர் அனுபமா அஞ்சலி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, அவர் பேசியதாவது: திருப்பதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ரேணிகுண்டா சாலையில் இருந்து திருச்சானூர் மாம்பழச்சந்தை வரை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணியை வருகிற மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். இதுதொடர்பாக பொறியியல், ஆப்கான்ஸ் மற்றும் ஏஇகாம் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கால அட்டவணைப்படி பணிகள் நடைபெறவில்லை. இதனால் கூடுதல் ஆட்களை நியமித்து குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். ரேணிகுண்டா வழித்தடத்திலும், திருச்சானூர் வழித்தடத்திலும் மேம்பால பணிகளை முடித்து வாகனங்கள் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

பணிகளில் காலதாமதம் ஏற்பட்ட கூடாது. இன்ஜினியரிங் அலுவலர்களும் தினமும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு, அவர் பேசினார்.

தொடர்ந்து, ராமானுஜ ஜங்ஷன் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது கண்காணிப்பு பொறியாளர் மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: