விசாகப்பட்டினத்தில் தாறுமாறாக ஓடிய கார் தூக்கி வீசப்பட்ட நபர்கள் படுகாயம்: போலீசார் விசாரணை

ஆந்திர: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் காரை வேகமாக ஓட்டிச்சென்ற நபருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் கார் சாலையில் நின்று கொன்றுதவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகிய காட்சிகள்சி.சி.டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை ஓரமாக நின்று கொண்டிருந்த இருவர் மீது வேகமாக வந்த கார் மோதிய சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து விசாகப்பட்டினம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இந்த காரை ஒட்டிய நபரு உதய் என தெரியவந்துள்ளது. இந்த உதய் என்பவருக்கு வலிப்பு வந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வலிப்பு வந்த காரணத்தினால் அவர் வேகமாக ஒட்டி வந்த கார் தடுமாறி ஓரமாக நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இருவர் மீது வேகமாக மோதி இந்த விபத்துக்கான காரணம் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

வேகமாக வந்த கார் நின்றுகொண்டிருந்த இருவர் மீது தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலையே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து 108 வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.   

Related Stories: