ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு: 24ம் தேதி ஈரோடு சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவார் என்று, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துச்சாமி ஆகியோர் வாக்குசேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், திமுக சார்பில் பட்டியல் வெளியானதும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு பணியில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வார்டு வாரியாக நியமிக்கப்பட்டு வீடு, வீடாக சென்று தீவிரமாக வாக்குசேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வரும் 24ம் தேதி வெள்ளிக் கிழமை, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கை சின்னத்துக்கு வாக்குகேட்கிறார். அதன்படி வரும் 24ம் தேதி ஈரோடு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர், வெட்டு காட்டு வலசு 19வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் கை சின்னத்திற்கு வாக்குசேகரிக்கிறார். அப்போது நாச்சாயி டீ கடை, பெரிய வலசு, அக்ரஹாரம் வண்டி பேட்டை, கேஎன்கே ரோடு, தெப்பகுளம் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து உரையாற்றுகிறார்.

Related Stories: