குடிநீர் தொட்டியில் நாய் சடலம் வீசிய மனநிலை பாதித்த வாலிபர் கைது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராமத்தில், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், நாய் இறந்து கிடந்தது. ஊராட்சி தலைவர் காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில், எம்.புதுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதித்த வாலிபர் அய்யனார் (22) என்பவரை நாயை வீசியது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். இதுகுறித்து சிவகாசி டி.எஸ்.பி., தனஞ்செயன் கூறுகையில், ‘‘குடிநீர் தொட்டியில் நாயின் சடலம் கிடந்ததை பிப். 6ல் பார்த்துள்ளனர். ஆனால், பிரேத பரிசோதனையில் நாய் பிப். 3ம் தேதியே இறந்தது தெரிய வந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தொட்டியில் ஏறி போட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றோம்’’ என்றார். இதற்கிடையே, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஊராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் பிளிச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்தனர்.

Related Stories: