பாலியல் தொந்தரவு மாணவி தற்கொலை மாணவர்கள் கைது

காரைக்குடி: காரைக்குடி அருகே பாலியல் தொந்தரவால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். கல்லூரி மாணவி. இவருடன் படித்து வந்த அரியக்குடியை சேர்ந்த பசுபதி என்ற இளவரசன்(22), தேவகோட்டை ரெகுநாதபுரத்தை சேர்ந்த பாலகணேஷ்(19) ஆகியோர் மாணவியிடம் முதலில் நட்பாக பழகியுள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி, கடந்த வாரம் எலி மருந்தை தின்றார். மயங்கிய அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று இறந்தார். இதுகுறித்து மாணவியின் உறவினர் கொடுத்த புகாரின்பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து பசுபதி என்ற இளவரசன், பாலகணேஷ் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories: