அதானி விவகாரத்தை விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை!: தொடர் அமளியால் நாடளுமன்ற அவைகள் ஒத்திவைப்பு..!!

டெல்லி: அதானி குழுமம் மீதான குற்றசாட்டுகள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளை 4வது நாளாக இன்றும் ஒத்திவைக்க நேரிட்டது. அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை முறைகேடு புகார் குறித்து விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவைகளின் தலைவர்களுக்கு நோட்டீஸ் அளித்திருந்தனர். ஆனால் காலை மக்களவை கூடியதும் அதானி விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரிய எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பியதால் மக்களவையில் குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்து மக்களவை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை சபாநாயகர் ஓம். பிர்லா ஒத்திவைத்தார். அதானி நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டுகளால் எல்.ஐ.சி. மற்றும் பல்வேறு வங்கிகளின் சந்தை மதிப்பு சரிந்துள்ளது குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுத்ததால் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதானி குழுமம் மீதான புகார்கள் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். குழப்பத்திற்கு இடையே அவையை நடத்த முயன்ற மாநில முதல்வர் ஜெகதீப் தன்கரின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து மாநிலங்களவையும் 12 மணி வரை ஒத்திவைக்க நேரிட்டது.

Related Stories: