திருப்பத்தூர் மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி வெறிச்சோடிய இறைச்சிக்கடைகள்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி இறைச்சி கடைகள் வெறிச்சோடிய காணப்பட்டது.அறுபடை வீடுகளில் குடியிருக்கும் முருகப்பெருமானின் தைப்பூச திருவிழா நேற்று தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது. மேலும் இந்த தைப்பூச திருவிழா ஞாயிற்றுக்கிழமை வந்ததால் அசைவ பிரியர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் அசைவ உணவை உட்கொள்வார்கள்.

இந்த நிலையில் தைப்பூசம் திருவிழா தமிழ் கடவுள் முருகனுக்கு நேர்த்திக்கடன் மற்றும் காவடி எடுத்து பால்காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, உள்ளிட்டவைகளை  எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர். இதில் திருத்தணி, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு காவடிகள் ஏந்தி சென்று வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதும் என இறைச்சி கடைக்காரர்கள் ஆடு, கோழி மீன், உள்ளிட்டவைகளை விற்பனைக்காக வைத்திருந்தனர்.

ஆனால் தைப்பூச திருவிழாவைமுன்னிட்டு திருப்பத்தூர் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட், இறைச்சி மார்க்கெட் மற்றும் கோழிக்கடை உள்ளிட்டவைகளில் பொதுமக்கள் இறைச்சிகளை வாங்காமல் இருந்ததால்  அனைத்து இறைச்சி கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: