பைக் மீது லாரி மோதியதில் சிறுவன் பலி எதிரொலி: 22 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தின் தஸ்னா பகுதியில் உள்ள சாலையில் கடந்த 3ம் தேதி 11ம் வகுப்பு மாணவன் ஆஷிஷ் (17), தனது நண்பனுடன் பைக்கில் சென்றான். சாலையின் எதிர் திசையில் ஆஷிஷ் பைக் ஓட்டி சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் ஆஷிஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அவனுடன் வந்த சிறுவன் படுகாயமடைந்தான். தகவலறிந்து காசியாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 18 வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் 22 பேர் பைக் ஓட்டியுள்ளனர். அவர்களை போலீசார் பிடித்ததோடு, பைக் ஓட்ட அனுமதித்த அவர்களின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: