மத்தியபிரதேசத்தில் கொடூரம், உடலில் 50 சூடு வைத்து 2 மாத குழந்தை கொலை

ஷதோல்:  மத்தியபிரதேச மாநிலம் ஷதோல் மாவட்டத்தில், உடலில் 50 சூடு வைக்கப்பட்டதால் இரண்டரை மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஷதோல் மாவட்டம் சிங்பூர் பகுதியில் உள்ள கத்தோடியாவில் வசிக்கும் பெண், உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் இரண்டரை மாதம் பெண் குழந்தையை உள்ளூர் வைத்தியரிடம் அழைத்து சென்றுள்ளார். அந்த வைத்தியர் குழந்தையை குணப்படுத்த குழந்தையின் உடலில் 50 சூடு வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட குழந்தை ஷதோல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதை தொடர்ந்து குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து ஊடகங்களில் வௌியான செய்திகளின் அடிப்படையில், அந்த குழந்தையின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: