கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கான மின் கட்டணம் குறைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நசியனூர் சாலையில் உள்ள வணிகர் சங்க கட்டிடத்தில் அனைத்து தொழில் வணிகர் சங்கங்களின் சார்பில், வேட்பாளர் விவாத மேடை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஏ.வ.வேலு, பெரியகருப்பன், முத்துசாமி, செந்தில் பாலாஜி, த.மோ.அன்பரசன், மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை ஏற்று மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை, 1000 யூனிட் ஆகவும்,

இதேபோல கைத்தறி நெசவாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த 200 யூனிட் மின்சாரத்தை 300 யூனிட் ஆக உயர்த்தப்படும். (திமுக கடந்த சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.) மேலும் விசைத்தறியாளர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.1.40 பைசா உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரூ.0.70 பைசாவாக குறைத்து அதற்கான ஆவணங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். தற்போது இடைத்தேர்தல் நடப்பதால், தேர்தல் ஆனையத்திடன் உரிய அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்படும். இவ்வாறு செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Related Stories: