திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் இலவசமாக வேட்டி, சேலை வழங்கும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தனியார் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர்.  தைப்பூசத்தை ஒட்டி தனியார் நிறுவனம் சார்பில் இலவச புடவைகள் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து பெண்கள் குவிந்தனர். ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டு பெண்கள் மயக்கமடைந்தனர். இலவச வேட்டி, சேலைக்கான டோக்கன் பெற முயன்றபோது நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 10 பேர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக வட்டாட்சியர் சம்பத், போலீசார் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: