டெல்லியில் சிஆர்பிஎப் எஸ்ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

புதுடெல்லி: ஒன்றிய உளவுத்துறை இயக்குனராக பணியாற்றி வருபவர் தபன் டிகா. இவரது அரசு பங்களா டெல்லி துக்ளக் சாலையில் உள்ளது. இங்கு ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎப்) பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை, உளவுத்துறை இயக்குனர் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜ்பிர் சிங் (53) என்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: