பொள்ளாச்சி வழியாக பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ‘ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்’: வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வழங்கல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி  வழியாக பழனி பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, வட்டார  போக்குவரத்து அதிகாரிகள் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் வினியோகம் செய்தனர். திண்டுக்கல்  மாவட்டம் பழனி முருகன் கோயிலில் நடக்கும் தைப்பூச திருவிழாவையட்டி கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட  தமிழகத்தின்  பல பல்வேறு  மாவட்டங்களில்  பக்தர்கள் பாத யாத்திரையாக நடைபயணம்  மேற்கொள்கின்றனர்.  தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு சென்று சாமிதரிசனம் செய்து  வருகின்றனர்.

இதில், கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும்  அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள்  பாத யாத்திரையாக அதிகளவில் செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் சாலை  போக்குவரத்து மற்றும் வெயிலில் தாக்கத்தை கருத்தில் கொண்டு, இரவு நேரத்தில்  நடைபயணம் மேற்கொள்கின்றனர். கோவை ரோடு, உடுமலை ரோடுகளில் வாகனங்கள்  அதிவேகத்துடன் செல்வதால், பக்தர்களுக்கு விபரீத விளைவுகள் ஏற்படாமல் இருக்க  ஆங்காங்கே போலீசார் வேகமாக வரும் வாகனங்களை கண்காணித்து விபத்தை தடுக்க  முயற்சி எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து,  இரவு நேரங்களில் பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு  போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு கருதி ரிப்ளெக்டர் ஸ்டிக்கர்  மற்றும்  வடடார போக்குவரத்து அதிகரிகள் வழங்குகின்றனர்.

நாளை (5ம் தேதி)  தைப்பூசதிருவிழா என்றாலும், அதன் பிறகும் பக்தர்கள் வந்து செல்வதாக  கூறப்படுகிறது. இதனால், பல்வேறு இடங்களில் பக்தர்களின் கைகளிலும், முதுகு  பகுதியிலும் ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டி விடப்படுகிறது. நேற்று  முன்தினம் இரவு வட்டார போக்குவரத்து துறை சர்பில் நடந்த நிகழ்ச்சியில்,  வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமையில், நடைபாதையாக வந்த  பக்தர்களுக்கு ரிப்ளெக்டர் ஸ்டிக்கரை  ஒட்டியதுடன்  வழங்கினார். மோட்டார்  வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேற்று  ஒரேநாளில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் வழங்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: