அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து படிவம் வெளியிட்டார் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட தென்னரசுவை அதிமுக வேட்பாளராக அறிவித்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் படிவம் வெளியிட்டார். பொதுக்குழு மூலம் அதிமுக வேட்பாளரை முடிவு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொண்டார். பிரமாண பத்திரத்தில் வேட்பாளருக்கு ஒப்புதல் அளிக்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுக்குழு உறுப்பினர்கள் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள். ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில் இன்று அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்து அவைத்தலைவர் படிவம் வெளியிட்டார். 

Related Stories: