தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை மையம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததையடுத்து புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.    

இந்நிலையில், தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், மயிலாடுதுறை, நாமக்கல், கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, குமரி, மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் 2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories: