ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர், வேட்பு மனுவுடன் இரட்டை இலை சின்னம் கேட்டு மனு..!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளர் செந்தில் முருகன் இரட்டை இலை சின்னம் கேட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். தன்னை அதிமுக வேட்பாளர் என்று குறிப்பிட்டு வேட்பு மனுவுடன் இரட்டை இலை சின்னத்தையும் கோரி செந்தில் முருகன் மனு தாக்கல் செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் சற்று நேரத்துக்கு முன்பு தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

இந்த வேட்பு மனுவில் ஈரோடு கிழக்கு தொகுதியில், அரசியல் கட்சியை சார்ந்தவர்களா என்ற இடத்தில் ஆம் எனவும், கட்சியின் பெயர் அஇஅதிமுக எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இரட்டை இலை சின்னத்தையும் கோரி தேர்தல் அதிகாரியிடம் மனுவாக அளித்துள்ளார்.

Related Stories: