மளமளவென சரியும் சாம்ராஜ்யம்: அதானி குழும நிறுவன பங்குகள் 7வது நாளாக வீழ்ச்சி..!!

குஜராத்: அதானி குழும நிறுவன பங்குகள் 7வது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளன. அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி வில்மர் பங்குகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை அளித்ததை அடுத்து 7வது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 15 சதவீதம் அதாவது ரூ.234 சரிந்து ரூ.1330ஆக வீழ்ச்சியடைந்தது.

அதானி போர்ட்ஸ் நிறுவன பங்கு விலை 6 சதவீதம் அதாவது ரூ.28 குறைந்து ரூ.433ஆக உள்ளது. அதானி பவர் நிறுவன பங்கு விலை 5 சதவீதம், ரூ.10 குறைந்து ரூ.192ஆக உள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு விலை 10 சதவீதம் அதாவது ரூ.155 சரிந்து ரூ.1401ஆக வீழ்ச்சியடைந்தது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்கு விலை 10 சதவீதம் அதாவது ரூ.103 குறைந்து ரூ.934 ஆக உள்ளது.

அதானி நிறுவனத்துக்கு நியூயார்க் பங்குச்சந்தை தடை:

முறைகேடு புகார் காரணமாக அதானி குழும நிறுவனத்துக்கு நியூயார்க் பங்குச்சந்தையான டோ ஜோன்ஸ் தடை விதித்தது. இந்தியப் பங்குச்சந்தைகளில் அதானி நிறுவன பங்குகள் தொடர்ந்து 7வது நாளாக இன்றும் சரிவைச் சந்தித்துள்ளன. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமத்துக்கு தடை விதித்துள்ளதாக டோ ஜோன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories: