பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: பொன்குமார் அறிக்கை

சென்னை: ஒன்றிய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என தமிழ்நாடு விவசாயிகள் -தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு 70 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதும், உள்கட்டமைப்பை மேம்படுத்திட ஆண்டுதோறும் பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருப்பதும், கட்டுமான துறைக்கு ஆறுதலான செய்தி என்றாலும் கட்டுமானத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை ஏற்கப்பட வில்லை.

கர்நாடகத்தின் நீர் மேலாண்மைக்கு ரூ.5000 கோடியை ஒதுக்கிய ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றிட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு நிதி ஏதும் ஒதுக்கப்படவில்லை. கர்நாடகத்தில் நடைபெற உள்ள தேர்தலை மனதில் கொண்டு ஒன்றிய அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருப்பதை போன்று இந்த நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டை ஏமாற்றி உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக இருந்து தாக்கல் செய்யும் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: