கடலூர் சில்வர் பீச் பகுதியில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு

கடலூர்:  கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் உள்ளிட்ட துறைமுக பகுதியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று காலை முதல் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடலோர பகுதியிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.  

அவ்வப்போது சாரல் மழை சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. மேலும் வழக்கத்தை விட கடலில் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே காற்று பலமாக வீசும் என தெரிவித்திருந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டது. வழக்கத்தை விட அலை சீற்றம் அதிகளவு காணப்பட்டதால் பொதுமக்கள் யாரும் கடலூர் சில்வர் பீச் உள்ளிட்ட கடற்கரை பகுதிக்கு போலீசார் அனுமதிக்காமல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: