மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை: வாக்கு எண்ணிக்கை குறித்து முக்கிய அறிவுரை

சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலகர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு பணியில் எவ்வளவு துணை ராணுவ வீரர்களை ஈடுபடுத்துவது, எவ்வளவு போலீசாரை ஈடுபடுத்துவது என்பது குறித்தும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் போது முன்னணி நிலவரங்களை எவ்வாறு வெளியிட வேண்டும் என்பது குறித்தும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை வழங்கினார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் போதிய அளவு சிசிடிவி கேமரா பொருத்துவது, வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை பதிவேற்றம் செய்வது, வெப் காஸ்டிங் ஒளிபரப்பு செய்வது, வாக்கு எண்ணிக்கை தொடர்பான பயிற்சிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அளிப்பது, எல்லையோர மாவட்டங்களில் உள்ள நிலவரங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும், ஒரு தேர்தல் பார்வையாளர்கள் வெளி மாநிலங்களில் இருந்து நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்தல் வரை அவர்கள் தமிழகத்தில் தங்கியிருந்து பணிகளை செய்தனர். தற்போது தேர்தல் முடிவடைந்துள்ளதால் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி விட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது ஜூன் 4ம் தேதி அந்தந்த தொகுதிக்கு வந்து அவர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை: வாக்கு எண்ணிக்கை குறித்து முக்கிய அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: